அம்மாபேட்டை விவசாயிகள் தர்மபுரிக்கு சுற்றுலா சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்டனர்
அம்மாபேட்டை விவசாயிகள் தர்மபுரிக்கு சிறுதானிய கண்காட்சியை பார்வையிட சென்றனா்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அம்மாபேட்டை வட்டாரத்துக்குட்பட்ட 4 கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அட்மா திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன் தலைமையில் தர்மபுரி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற சிறுதானியங்கள் கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் அரங்குகளில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது குறித்து கருத்தரங்கில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உழவன் செயலியில் மானிய திட்டங்களுக்கு விவசாயிகள் பதிவு செய்யும் முறை செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. கருத்தரங்கில் வேளாண்துறை சார்ந்த மானிய திட்டங்கள் மற்றும் அனைத்து துறை மானிய திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தியாகராஜன், உமா ஆகியோர் செய்திருந்தனர்.