தஞ்சையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ரெயிலடியில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், அமைப்பு செயலாளர் தேவதாஸ், வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டணம், வீட்டுவரி, சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டிப்பதுடன் இந்த உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நல்லதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் கீதா சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட கழக, கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.