பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் அ.ம.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் அ.ம.மு.க. கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தேனி
பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் கணேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்து பேசினர். அப்போது அ.ம.மு.க. கவுன்சிலர்கள் வெங்கடேஷ், பால்பாண்டி ஆகியோர் தங்களது வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யவில்லை என்று கூறி நகராட்சி தலைவர் நாற்காலி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஒரு மாத காலத்திற்குள் பணிகள் நடைபெறும் என நகராட்சி தலைவர் கூறினார்.
இதையடுத்து அவர்கள் தங்கள் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story