அ.ம.மு.க. பொதுக்கூட்டம்


அ.ம.மு.க. பொதுக்கூட்டம்
x

கொள்ளிடத்தில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கோமல் அன்பரசன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் ராஜி, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராமு வரவேற்றார். கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அண்ணாமதி, மாவட்ட அவைத்தலைவர் சாதிக்பாஷா, மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, மாவட்ட இணை செயலாளர் அமுதவல்லி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.


Next Story