அ.ம.மு.க. நிர்வாகி மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார்


அ.ம.மு.க. நிர்வாகி மீது   அ.தி.மு.க.வினர்  போலீசில் புகார்
x

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய அ.ம.மு.க. நிர்வாகி மீது அ.தி.மு.க.வினர் தென்கரை போலீசில் புகார் செய்தனர்.

தேனி

அ.ம.மு.க. நிர்வாகி மீது புகார்

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுரேஷ் என்பவர் நேற்று பெரியகுளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார். இந்நிலையில் பெரியகுளம் நகர அ.தி.மு.க. துணைச் செயலாளர் அப்துல்சமது, அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முன்னாள் அரசு வக்கீல் வெள்ளைச்சாமி ஆகியோர் தனித்தனியாக தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் அ.ம.மு.க. நிர்வாகி சுரேஷ் என்பவர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களை அச்சிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் என்று சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்த சுவரொட்டி அ.தி. மு.க.வினர் இடையே பிரிவை உண்டாக்கி பெரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது. எனவே சுரேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து சுரேசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வக்கீல் சந்திரசேகரன், ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் தென்கரை போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சுவரொட்டி பிரச்சினை குறித்து பேசினர். பேச்சுவார்த்தையின் போது சுரேஷ் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து புகார் மனு திரும்ப பெறப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story