அ.ம.மு.க. பிரமுகரின் இரும்பு கடையில் ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு


அ.ம.மு.க. பிரமுகரின் இரும்பு கடையில் ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு
x

குடியாத்தத்தில் அ.ம.மு.க. பிரமுகரின் இரும்பு கடையில் ரூ.1½ லட்சம் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் கோபாலபுரம் மஜீத் தெருவை சேர்ந்தவர் நவ்ஷாத் (வயது 40). அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகர பொருளாளராக உள்ள இவர் குடியாத்தம் எம்.பி.எஸ்.நகர் விரிவாக்க பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இன்று காலையில் கடை திறந்த போது கடையின் மேற்கூறையின் இரும்பு ஷீட்டுகள் அகற்றப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டு உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 150 கிலோ எடையுள்ள தாமிர கம்பிகளும், சுமார் 70 கிலோ எடையுள்ள பித்தளை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டிருந்தது.

அதேபோல் திருடர்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதறகாக கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவு கருவிகளையும் திருடிச்சென்று விட்டனர்.

திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

இந்த துணிகர திருட்டு குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் நவ்ஷாத் புகார் செய்தார்.

அதன்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story