பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்தது; பெண் துறவி பலி


பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்தது; பெண் துறவி பலி
x

நாங்குநேரி அருகே பாதயாத்திைர பக்தர்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் பெண் துறவி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே பாதயாத்திைர பக்தர்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் பெண் துறவி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாத யாத்திரை பக்தர்கள்

மத்திய பிரதேசத்தில் இருந்து சமண துறவிகள் 7 பேர் நாடு முழுவதும் உள்ள சமண கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள கோவிலுக்கு நெல்லை வழியாக சென்றனர்.

நேற்று அதிகாலை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம் பகுதியில் பாத யாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்னால் துறவிகளின் உடைமைகளை ஏற்றிக்கொண்டு காரும் சென்றது.

லாரி மோதியது

அப்ேபாது, அந்த வழியாக நெல்லையில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் நோக்கி லாரி வந்தது. அந்த லாரி கண்இமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து, கார் மீதும் ேமாதியது.

இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ருச்சிகா (வயது 65), மத்திய பிரதேசத்தை சேர்ந்த சீலாபாய் (29), ராஜஸ்தானைச் சேர்ந்த ஜின்னாக்கியா (34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த மற்ற துறவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் காரும், அதில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

பெண் துறவி பலி

அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ருச்சிகா பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் பாரைக்கோடு வடலிவிளையை சேர்ந்த ஜான் சுந்தர் சிங் (35) என்பவரை கைது செய்தனர்.

நாங்குநேரி அருகே பாதயாத்திைர பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் பெண் துறவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story