காரிமங்கலத்தில் வீடுகளின் பழுதை சீரமைக்க நிதிஉதவி-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியத்தில் அரசு மானியத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வரும் 2 பேருக்கு வீடுகளில் பழுதை சீரமைக்க பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் தலைமைதாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதிஉதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கணபதி, மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story