டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியதில் பலியான 3 மாத பெண் குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி-கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நூலஅள்ளி அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் டிராக்டரில் ஆந்திராவுக்கு சென்றனர். வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நேற்று காலை டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சதீஷ் என்பவரின் 3 மாத பெண் குழந்தை வர்ஷினியும் உயிரிழந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வர்ஷினியின் குடும்பத்தினரை கலெக்டர் சாந்தி நேற்று இரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் கீதாராணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story