ரூ.13¾ கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப்பணிகள்
வேட்டவலம் பேரூராட்சியில் ரூ.13 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
வேட்டவலம்
வேட்டவலம் பேரூராட்சியில் ரூ.13 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
குடிநீர் திட்டப்பணிகள்
வேட்டவலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் சுழற்சி முறையில் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குடிதண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ரூ.13 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட வளன் நகர், பாரதிதாசன் தெரு, வடக்குவெளி ஆகிய பகுதியில்
1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், பெரிய ஏரியில் 5 புதிய திறந்தவெளி கிணறுகள் மற்றும் 15 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் புதிய பைப் லைன் அமைக்கும் குடிநீர் திட்டப்பணிகளின் தொடக்க விழா இன்று கடைவீதி பழைய போலீஸ் நிலையம் அருகே நடந்தது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா வரவேற்றார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் சாதனைகள்
அப்போது தமிழக அரசின் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து அவர்கள் பேசினார்கள்.
விழாவில் எஸ்.கே.பி கல்விக்குழும தலைவர் கு.கருணாநிதி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சாப்ஜான், உதவி செயற்பொறியாளர் மணிமாறன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, புவனேஸ்வரி, வைத்தீஸ்வரி, சாந்தி, அன்சர் அலி, மணி, பழனி, டேவிட், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் தொகுத்து வழங்கினார்.
முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி நன்றி கூறினார்.