அமுத பெருவிழா
பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் அமுத பெருவிழா நடந்தது.
திண்டுக்கல்
பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் சுதந்திர திருநாள், அமுத பெருவிழா நிகழ்ச்சி, கொடைரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பிரம்ம குமாரி அமிர்தலட்சுமி தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வரவேற்று பேசினார். அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். இதில் அனைத்து வர்த்தக சங்க செயலாளர் விஜய் தமயந்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story