Normal
அமுக்கரா மாத்திரை வினியோகம்
காமயகவுண்டன்பட்டியில் அமுக்கரா மாத்திரை வினியோகம் செய்யப்பட்டது.
தேனி
காமயகவுண்டன்பட்டியில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அமுக்கரா சித்த மருத்துவ மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். அரசு சித்த மருத்துவர் சிராஜ்தீன் பொதுமக்களுக்கு அமுக்கரா மாத்திரையை வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா, துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறுகையில், அமுக்கரா மாத்திரை மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொது உடல்நலத்தை மேம்படுத்தும் பொருட்டும், முதியவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்கும் வகையிலும் மாத்திரை வழங்கப்படுகிறது. இதை காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை என்று தொடர்ந்து சாப்பிடலாம் என்றார்.
Related Tags :
Next Story