பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூர்
ஒரத்தநாடு
ஒரத்தநாடு அரசு போக்குவரத்து பணிமனை எதிரே அரசு வணிக வளாக கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் செங்கதிர். இவரது மனைவி பகவதி (வயது42). இவர் நேற்று காலை மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்களில் ஒருவர் கடையிலும், மற்றொருவர் கடைக்கு எதிரே உள்ள பட்டுக்கோட்டை தஞ்சை மெயின் சாலையில் மோட்டார் சைக்கிளிலும் நின்று கொண்டிருந்தார். அப்போது பகவதியிடம் பொருட்கள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டே அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story