குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி


குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலியானான்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடியில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலியானான்.

8 வயது சிறுவன்

தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை 1-வது தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் முகமது ரஷீத் (வயது 8). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் இரவு 10 மணி ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக புளியங்குடி போலீசில் புகார் செய்தனர்.

குளத்தில் பிணமாக கிடந்தான்

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கோவிந்தபேரி குளத்தில் ஒரு சிறுவன் உடல் மிதந்தது. அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு இறந்து கிடந்தது முகமது ரஷீத் என்பது தெரியவந்தது. அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குளத்தின் அருகே சென்றபோது சிறுவன் முகமது ரஷீத் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புளியங்குடியில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story