85 வயது மூதாட்டி குளத்தில் தவறி விழுந்து பலி


85 வயது மூதாட்டி குளத்தில் தவறி விழுந்து பலி
x

85 வயது மூதாட்டி குளத்தில் தவறி விழுந்து பலியானார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

85 வயது மூதாட்டி குளத்தில் தவறி விழுந்து பலியானார்.

வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை மனைவி உண்ணாமலை (வயது 85). கடந்த 17-ந் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் மூதாட்டி உண்ணாமலை தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி விசாரணை செய்து வருகின்றார்.


Next Story