தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் கைது
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் கடந்த 2014-ம் ஆண்டு லாரியில் போதை பொருட்களை கடத்தி வந்த வழக்கில் கேரளா மாநிலம் பத்திரம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 1½ ஆண்டுகளாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இந்த நிலையில் சீதபற்பநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகைதீன்மீரான் தலைமையிலான போலீசார் கேரளா சென்று ஆரிப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story