கோவில் திருவிழாவில் வெடி வெடித்தபோது விபத்து; பெண் படுகாயம்


கோவில் திருவிழாவில் வெடி வெடித்தபோது விபத்து; பெண் படுகாயம்
x

வேப்பந்தட்டை அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது பெண் படுகாயம் அடைந்தார். 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

பெரம்பலூர்

கோவில் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள கை.களத்தூர் பாதாங்கியில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது வாணவெடி வெடிக்கப்பட்டது. அப்போது வெடி ஒன்று கை.களத்தூரை சேர்ந்த செல்வக்குமாரி (வயது 40) என்பவர் தலையில் விழுந்து வெடித்தது.

இதில் செல்வக்குமாரி படுகாயம் அடைந்தார். மேலும் வெடி வெடித்த அதிர்ச்சியில் பாதாங்கி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி (21), ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி (16) ஆகியோர் மயங்கி விழுந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story