மதுவுக்கு அடிமையானவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி
திருச்சி பொன்மலைப்பட்டி கருத்தசாமி நகர் நேரு தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மகன் சீனிவாசன் (வயது 38). இவருக்கு பல இடங்களில் பெண்பார்த்தும் திருமணம் கைகூடவில்லை. இதனால் விரக்தி அடைந்த இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story