சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் கலையரங்கத்தில் மேற்கூரை அமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்    கலையரங்கத்தில் மேற்கூரை அமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
x

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் கலையரங்கத்தில் மேற்கூரை அமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு என்று ஓய்வு அறையோ, தங்கும் விடுதியோ இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவில் கலையரங்கத்தில் மேற்கூரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தடையில்லா சான்று கிடைக்காத காரணத்தால் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மறைவிற்கு பின் அவரது மகனான கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தந்தை கொண்டு வந்த அந்த திட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுத்ததன் பேரில் கலையரங்கத்தில் மேற்கூரை அமைப்பதற்காக ரூ.35 லட்சத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கலை அரங்கத்திற்கு மேற்கூரை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த விஜய் வசந்த் எம்.பி.க்கு சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள், நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story