மீனவர் வலையில் சிக்கிய நங்கூரம்


மீனவர் வலையில் சிக்கிய நங்கூரம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே மீனவர் வலையில் நங்கூரம் சிக்கியது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே உள்ள நாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம், காளிமுத்தன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அப்போது அவர்களின் வலையில் சுமார் 100 கிலோ எடை கொண்ட பெரிய படகுகளில் பயன்படுத்தக்கூடிய நங்கூரம் ஒன்று சிக்கி உள்ளது.அதனை கரைக்கு கொண்டு வந்தனர்.மேலும் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, தொண்டி கடற்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், முதல் நிலை காவலர் சரவணபாண்டியன் ஆகியோர் மீனவர்கள் வலையில் சிக்கிய நங்கூரத்தை மீட்டு கடற்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.


Next Story