அகழாய்வில் கிடைத்த பழங்கால மண் கிண்ணம்
விஜயகரிசல்குளம் அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்ெடடுக்கப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் கூடுதலாக 3 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த குழியில் ஏராளமான மண் ஓடுகள் மற்றும் சுடுமண்ணால் செய்த மண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பழங்காலத்தில் குழந்தைகளுக்கு உணவூட்ட இதுபோன்ற கிண்ணத்தை பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு இணை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார். இதுவரை 2-ம் கட்ட அகழாய்வில் 2,060 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story