அகழாய்வில் கிடைத்த விலங்கின் கொம்பு


அகழாய்வில் கிடைத்த விலங்கின் கொம்பு
x

சிவகாசி அருகே அகழாய்வில் விலங்கின் கொம்பு கிடைத்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஏராளமான பாசி மணிகள், சூது பவளம், சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள். சிறுவர்கள் விளையாட பயன்படுத்தப்பட்ட பொம்மைகள், பெண்கள் அணியக்கூடிய அணிகலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இந்தநிலையில் பெண்கள் காலில் அணியக் கூடிய சங்கினால் செய்யப்பட்ட அணிகலன் கிடைத்துள்ளது. விலங்குகளின் கொம்பும் கண்டெடுக்கப்பட்டது. இக்கொம்பில் வேலைப்பாடு இருப்பதால் பண்டையகாலத்தில் ஆயுதமாகவும், பெரிய மூடைகளில் எழுத்து எழுதுவதற்காகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story