ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனம்


ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனம்
x

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்

வேலூர்

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனத்தை கொடிசயசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார்கள் பாலாஜி, பழனி, ஊழல்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு மற்றும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனர்.


Next Story