மருதையாறு கிளை ஓடைகளை தூர்வார மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது


மருதையாறு கிளை ஓடைகளை தூர்வார மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது
x

மருதையாறு கிளை ஓடைகளை தூர்வார மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான மருதையாறு மற்றும் அதன் கிளை ஓடைகளை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு தொடர்பாக தமிழக அரசின் நீர் வளத்துறையின் மருதையாறு வடிநில உபகோட்டத்தின் அலுவலகத்தில் இருந்து பதில் மனு அனுப்பப்பட்டது. அதில், மருதையாறு மற்றும் அதன் கிளை ஓடைகளான சாத்தனூர், எஸ்.குடிகாடு, தெற்கு மாதவி, கொளக்காநத்தம், இலுப்பைக்குடி ஆகிய கிளை ஓடைகள் தூர் வாரப்பட்டன. மீதமுள்ள ஓடைகளை வரும் நிதியாண்டில் தூர்வார சிறப்பு தூர் வாரும் திட்டத்தில் கருத்து சேர்க்கப்பட்டு, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் பணிகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மருதையாறு மற்றும் கிளை ஓடைகளை தூர் வாரும் போது ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமைக் கருவேல முட்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெரம்பலூர் நகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் மருதையாற்றில் கலக்காமல் இருக்க தகுந்த மேல் நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு தனியாக கடிதம் எழுதப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மருதையாற்றையும், அதன் கிளை ஓடைகளையும் முறையாக தூர்வாரி, ஆற்றின் இருபுறம் கரைகளையும் சீரமைத்து அதில் மருத மரம் உள்ளிட்ட பாரம்பரிய மரக்கன்றுகளை நட்டு வளர வைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story