மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி
x

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனை கண்டித்து, கம்பம் ஏ.கே.ஜி. திடலில் அந்த அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அங்கு வந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து அந்த அமைப்பின் தேனி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அப்பாஸ்மந்திரி (வயது 38), ஜலீல் (55), வாசீம்அக்ரம் (25), தாரீக்அகமது (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story