மின் ஊழியர் வீட்டில் திருட முயற்சி
மின் ஊழியர் வீட்டில் திருட முயற்சி
கருங்கல்:
கருங்கல் அருகே மாங்கரை காட்டுக்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுகிர்தமணி மகன் சுதர் (வயது 40). இவர் நெல்லையில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுதரின் மனைவி, மாமியார், பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் இரவு 11.45 மணிக்கு யாரோ மர்ம நபர் வீட்டின் பின்பகுதியில் உள்ள கதவை திறக்கும் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு சுவிட்சை போட்டுள்ளனர். வெளிச்சம் ஏற்பட்டதை கவனித்ததும் கதவை திறக்க முயன்ற திருடன் தப்பி ஓடி விட்டார்.
அதே சமயத்தில் திருட பயன்படுத்திய கம்பி கட்ட பயன்படுத்தப்படும் ஆயுதத்தை கதவிலேயே வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது. இது சம்பந்தமாக சுதர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் திருடன் விட்டு சென்ற ஆயுதத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.