தூத்துக்குடி அருகே இலங்கைக்கு 40 மூட்டைகளில் பீடி இலைகள் கடத்த முயற்சி


தூத்துக்குடி அருகே இலங்கைக்கு 40 மூட்டைகளில் பீடி இலைகள் கடத்த முயற்சி
x

தூத்துக்குடி தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறிய ரக சரக்கு வாகனத்திலிருந்து படகில் பீடி இலை பண்டல்களை இறக்கிக்கொண்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 1.25 டன் எடையுள்ள மூட்டை பீடி இலை பண்டல்கள், சிறிய ரக சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story