சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம்


சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுதானியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை பயிரிடுவதன் அத்தியாவசத்தை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் விளம்பர வாகன பிரச்சார ஊர்தியை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக சிறப்பித்திடும் வகையில் கம்பு, தினை, சாமை, வரகு, கேழ்வரகு போன்ற சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறுதானிய உணவை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வேளையாவது எடுத்துக்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அறிவுறுத்தும் வகையிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 2023-2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 வாகனங்களை கொண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

இதில் இணை இயக்குனர் வேளாண்மை(பொறுப்பு) சுந்தரம், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், கள்ளக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண்மை அலுவலர் பொன்னுராசன், கள்ளக்குறிச்சிஅட்மா திட்ட உதவி மேளாலர் சக்திவேல் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story