சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு மாரத்தான்

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனம் தன்னார்வ அமைப்பு சார்பில் 10 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

செம்பனார்கோவில் கீழ மூக்குட்டு பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சான்றிதழ்கள்

போட்டியானது ஆறுபாதி, விளநகர், மன்னம்பந்தல், மூங்கில்தோட்டம் வழியாக 10 கிலோமீட்டர் தூரம் கடந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், ரொக்க பணம் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, மாவட்ட உடற்கல்வி அலுவலர் அப்துல்லா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story