மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கும் உதவி திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் நடந்தது. கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் காசிராஜன் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story