மோட்டார் சைக்கிள் ேமாதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் ேமாதி முதியவர் பலி
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் ேமாதி முதியவர் பலி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட நல்லதங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயசு65). இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வேதாரண்யத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தென்னம்புலத்தை சேர்ந்த ஸ்ரீராம்(22), பத்மாவதி(52) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் நோக்கி வந்தனர். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாலசுப்பிரமணியன் மீதுமோதியது. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த பத்மாவதி, ஸ்ரீராம் ஆகியோர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story