ரெயிலில் பயணம் செய்த வடமாநில முதியவர் மாரடைப்பால் பலி


ரெயிலில் பயணம் செய்த வடமாநில முதியவர் மாரடைப்பால் பலி
x

ரெயிலில் பயணம் செய்த வடமாநில முதியவர் மாரடைப்பால் பலியானார்.

ராணிப்பேட்டை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 57). இவரது மகன் அப்ராட். உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்ராட் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தந்தையும், மகனும் ஊருக்கு சென்றுள்ளனர்.

அப்போது ரெயிலில் திடிரென அன்சாரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். ரெயில் அரக்கோணம் வந்தடைந்த போது ரெயில்வே மருத்துவனை டாக்டர்கள் அன்சாரியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது போனது தெரிய வந்தது. இதனையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story