மேலூர் அருகே மின்சாரம் தாக்கி நாகர்கோவிலை சேர்ந்த மின்ஊழியர் பலி


மேலூர் அருகே மின்சாரம் தாக்கி நாகர்கோவிலை சேர்ந்த மின்ஊழியர் பலி
x

மேலூர் அருகே மின்சாரம் தாக்கி நாகர்கோவிலை சேர்ந்த மின்ஊழியர் பலியானார்.

மதுரை

மேலூர்

மதுரை மாவட்டத்தில் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கீழையூர் பகுதியில் விவசாய மின் இணைப்பிற்கு சென்றுள்ள தாழ்வழுத்த மின் பாதையினை மாற்றியமைக்கும் பணி நடந்தது. அப்போது உயர் அழுத்த மின் பாதையில் மின் கடத்திகளை இழுத்த போது மின்வாரிய ஊழியர் கோபி மின்சார விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அலூர் என்னுமிடத்தை சேர்ந்த கோச்சுகிருஷ்ணன் என்பவரது மகன் கோபி (30) ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. இந்த சம்பவம் மேலூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை செய்தனர். மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உடலை அனுப்பி வைத்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story