நடுரோட்டில் நின்ற யானை;போக்குவரத்து பாதிப்பு


நடுரோட்டில் நின்ற யானை;போக்குவரத்து பாதிப்பு
x

நடுரோட்டில் நின்ற யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு மலை பகுதியில் மணியாச்சியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் காட்டு யானை ஒன்று நடுரோட்டிலேயே நின்றுகொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 6.30 மணி அளவில் யானை தானாக காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து நடைபெற்றது.


Next Story