தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை


தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை
x

அரக்கோணம் அருகே இளநீர் பறித்ததை வீடியோ எடுத்ததால் தனியார் நிறுவன ஊழியர், மகன் கண்முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

இளநீர் பறித்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகி மனைவி சாந்தி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் கோமதி 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாஸ்கரன் விவாசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரன் (45) தென்னை மரத்தில் இளநீர் பறித்ததாக கூறப்படுகிறது. இதனை பாஸ்கரன் மகன் ஆகாஷ் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த சந்திரன் ஆத்திரமடைந்து ஆகாஷை துரத்தி சென்றுள்ளார்.

வெட்டிக்கொலை

இது குறித்து ஆகாஷ் தனது தந்தை பாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து பாஸ்கர் சந்திரனிடம் சென்று இளநீர் பஹித்தது குறித்து கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சந்திரன், இளநீர் வெட்டும் கத்தியால் பாஸ்கரை, அவரது மகன் ஆகாஷ் கண் முன் வெட்டியாதாக கூறப்படுகிறது. இதில் பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து மயங்கி விழுந்தார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து, சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story