மதுபாட்டிலால் தாக்கியதில் ஊழியர் படுகாயம்
மதுபாட்டிலால் தாக்கியதில் ஊழியர் படுகாயமடைந்தனர்.
லால்குடி மேலவாளாடி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 34). இவர் ஸ்ரீரங்கம் கொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் பாரில் இருந்தபோது, அங்கு வந்த 4 வாலிபர்கள், அவரிடம் 'ஆம்லெட்' கேட்டு தகராறு செய்தனர். மேலும் அங்கிருந்த மதுபாட்டிலால் சரவணனின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரவணனை தாக்கியது, திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த வரதராஜ் (22), திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(22), முருகேஷ் மற்றும் நடுகொண்டயம்பேட்டையை சேர்ந்த அபினேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வரதராஜ், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.