மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய என்ஜினீயர் திடீர் தற்கொலை


மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய என்ஜினீயர் திடீர் தற்கொலை
x

விடுதியில் தங்கி மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய என்ஜினீயர் திடீர் தற்கொலை.

கரூர்,

திருச்சி மாவட்டம், கொரியம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் லட்சுமணன் (வயது 25). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ராஜசூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 27-ந்தேதி லெட்சுமணனுக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர் கரூரில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் தனது மனைவி ராஜசூர்யாவுக்கு போன் செய்து தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வரும்படி கூறினார். அதன்படி ராஜசூர்யா திருச்சியில் இருந்து கரூருக்கு சென்றார். பின்னர் அன்று இரவு விடுதியில் லட்சுமணனும், ராஜசூர்யாவும் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினர். இதையடுத்து உடனடியாக ராஜசூர்யா விடுதியில் இருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த லட்சுமணன் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story