சென்னையில் விபசார தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அதிரடி கைது
சென்னையில் விபசார தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்பாவி கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய கொடுமை பற்றிய தகவல் அம்பலமாகி உள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த விடுதியில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அந்த 3 பெண்களையும் போலீசார் மீட்டனர். அங்கு விபசார தொழில் நடத்தியதாக புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தரகர் ஜெயப்பிரதா (வயது 20), இன்னொரு தரகர் பிரேம்தாஸ் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள் மூவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி
இதில் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. கைதான ஜெயப்பிரதா, சென்னையில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு படிக்கும் மாணவி ஆவார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலனோடு சேர்ந்து விபசார தொழில் செய்து வந்ததாகவும், தற்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இவர் ஓசை இல்லாமல் பணச்செலவுக்காக அப்பாவி கல்லூரி மாணவிகள் பலரையும், விபசாரம் செய்ய வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இவரது காதலன் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.