ஆசனூர் அருகே தப்பி ஓடிய விசாரணை கைதி மீண்டும் சிக்கினார்
ஆசனூர் அருகே தப்பி ஓடிய விசாரணை கைதி மீண்டும் சிக்கினார்.
தாளவாடி
ஆசனூர் அருகே தப்பி ஓடிய விசாரணை கைதி மீண்டும் சிக்கினார்.
விசாரணை கைதி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள மேகலன்குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). இவர் திருட்டு வழக்கு ஒன்றில் சாம்ராஜ்நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சாம்ராஜ்நகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சுரேஷ் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஆயுதப்படை போலீசார் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று முன்தினம் சாம்ராஜ் நகர் சிறையில் இருந்து சுரேசை பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
தப்பியவர் சிக்கினார்
தாளவாடி ஆசனூர் அருகே சென்றபோது போலீசார் வாகனத்தை நிறுத்தி அங்குள்ள ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து சுரேஷ் நைசாக தப்பி ஓடி விட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசனூர் மற்றும் கர்நாடக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கவுலந்தி ரெயில் நிலையத்தில் சுரேஷ் இருப்பது கர்நாடக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஆசனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.