அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் மாலை நேர கல்லூரி தொடங்கப்படும்


அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் மாலை நேர கல்லூரி தொடங்கப்படும்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் மாலை நேர கல்லூரி தொடங்கப்படும் என துணைவேந்தர் ரவி பேசினார்

ராமநாதபுரம்

தொண்டி

தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் துறை, தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், சென்னை ஆகியவை இணைந்து தொண்டி கடற்கரையில் சர்வதேச கடற்கரையோர சுத்தம் செய்யும் தினத்தை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். கடலியல் துறை தலைவர் டாக்டர் ரவிக்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவி கடற்கரை தூய்மை பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடலோரவியல் துறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தத் துறையில் படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் வேண்டுகோளின் அடிப்படையில் தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் மாலை நேர கல்லூரி விரைவில் செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலி கான், முன்னாள் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி ராஜசேகர், துறை இணை பேராசிரியர்கள் பரமசிவம், சுகுமார், பேரூராட்சி கவுன்சிலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து தொண்டி கடற்கரையில் துணைவேந்தர் ரவி தலைமையில் அனைவரும் கடற்கரை தூய்மை பணியை மேற்கொண்டனர். பின்னர் தொண்டி புதிய பஸ் நிலையம் முன்பு விழிப்புணர்வு பேரணியை கடலியல் துறை தலைவர் டாக்டர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பேரணி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவடைந்தது.


Next Story