வெம்பாக்கத்தில் 28-ந் தேதி உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்துவதற்கான கண்காட்சி


வெம்பாக்கத்தில் 28-ந் தேதி உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்துவதற்கான கண்காட்சி
x

வெம்பாக்கத்தில் 28-ந் தேதி உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்துவதற்கான கண்காட்சி நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

வெம்பாக்கத்தில் 28-ந் தேதி உள்ளூர் ரக பயிர்களை மேம்படுத்துவதற்கான கண்காட்சி நடக்கிறது.

பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் அந்தந்த பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். இதனை ேநாக்கமாக கொண்டு ஆண்டுக்கு 3 முறை உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகளை மாவட்டந் தோறும் நடத்த அரசு ஆணையிட்டு உள்ளது.

அதன்படி வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வெம்பாக்கம் தாலுகா கீழ்நெல்லி வேதபுரி வேளாண்மை அறிவியல் மையத்தில் உள்ளூர் ரக விவசாய பயிர் ரகங்கள் தொடர்பான கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் ரகப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களின் உள்ளுர் ரகப் பயிர் விளை பொருட்களை கொண்டு கண்காட்சி அமைக்கவும், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப அலுவலர்களுடன் கலந்துரையாடல் யெ்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தேவையான உள்ளுர் பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மேலும் உள்ளூர் ரக விளை பொருட்களை விற்பனை செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய கண்காட்சிகளில் விவசாயிகள் கலந்து கொண்டு பாராம்பரிய உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்தலாம்.

நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பாராம்பரிய பயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்ப உரை நிகழ்த்த உள்ளனர். இதில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story