வரத்து அதிகரிப்பு எதிரொலிஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்ததுகிலோ ரூ.55-க்கு விற்பனை


வரத்து அதிகரிப்பு எதிரொலிஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்ததுகிலோ ரூ.55-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Aug 2023 5:07 AM IST (Updated: 13 Aug 2023 5:10 AM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரிப்பு எதிரொலியால் ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது கிலோ ரூ.55-க்கு விற்பனையானது

ஈரோடு

வரத்து அதிகரிப்பு எதிரொலியாக ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விளைச்சல் பாதிப்பு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது.

அதன் பின்னர் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது. ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

தக்காளி விலை குறைந்தது

தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கிய பெண்கள் ¼ கிலோ, ½ கிலோ என தக்காளியை வாங்கி சென்றனர். கடந்த சில நாட்களாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 4 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் நேற்று தக்காளி விலை மேலும் குறைந்து, ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரித்தால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story