ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் வடிவேலு மீம்ஸ் போட்ட பேனரை காட்டி சுயேச்சை கவுன்சிலர் பேசியதால் பரபரப்பு


ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் வடிவேலு மீம்ஸ் போட்ட பேனரை காட்டி சுயேச்சை கவுன்சிலர் பேசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் நகர்மன்ற கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தனது வார்டில் எந்த பணியும் நடைபெறவில்லை என கூறி நடிகர் வடிவேலு படத்துடன் மீம்ஸ் ேபனரை காட்டியதால் தி.மு.க.கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் நகர்மன்ற கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தனது வார்டில் எந்த பணியும் நடைபெறவில்லை என கூறி நடிகர் வடிவேலு படத்துடன் மீம்ஸ் ேபனரை காட்டியதால் தி.மு.க.கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகர்மன்ற கூட்டம்

ஆம்பூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பி.ஏஜாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஷகிலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர பொதுநிதி செலவீனங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் மற்ற செலவினங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது.கூட்டத்தின்போது நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். 5-வது வார்டு கவுன்சிலர் வசந்த்ராஜ் கூறுகையில், ''கஸ்பா ரோட்டில் இருந்து சுடுகாடு செல்லும் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் விழுந்து காயம் அடைகின்றனர்.ஆம்பூர் கஸ்பா பகுதியில் மருத்துவமனை அமைத்து தர வேண்டும். தெரு மின் விளக்குகளை எல்.இ.டி.விளக்குகளாக மாற்றித்திற வேண்டும். கஸ்பா புது தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்றார்.

12-வது வார்டு கவுன்சிலர் லட்சுமிபிரியா அன்பு, ''எங்கள் வார்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை'' என்றார். தொடர்ந்து 13-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், ''நகர மன்ற கூட்டம் 4 அல்லது 5 மாதத்திற்கு ஒரு முறை தான் நடைபெறுகிறது. இனிமேல் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது கூட்டம் நடத்த வேண்டும்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து 27-வது வார்டு கவுன்சிலர் ஹர்ஷவர்தன் (சுயேச்சை), எனது வார்டில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறி வடிவேலுவின் 'மீம்ஸ்' உள்ள பேனரை காண்பித்து ஆட்சிக்கு எதிராக பேசினார்

வாக்குவாதம்

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் ஹர்ஷாவர்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, ''விரைவில் அனைத்து கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story