மாடிப்படியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


மாடிப்படியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x

மாடிப்படியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரதாணு. இவருடைய மனைவி அவ்வையார் (வயது 85). சிதம்பரதாணு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவ்வையாருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அவ்வையார் தோவாளையில் உள்ள மூத்த மகள் பார்வதியுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பார்வதி குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்காக அவ்வையாரை வீட்டில் விட்டு விட்டு கேசவன்புதூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலையில் பார்வதி வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவ்வையார் இல்லாததால், மாடிப்படிக்கட்டு பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு அவ்வையார் படியில் தலைகுப்புற விழுந்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். மாடிக்கு சென்ற அவ்வையார் கீழே இறங்கியபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும், அவர் இறந்து சில நாட்கள் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story