கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை


கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
x

சாத்தூர் அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் தாலுகா என்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 75). இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மாரியப்பனின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை இருக்கன்குடி போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story