ஆரணி அருகே மொபட் மோதி முதியவர் பலி


ஆரணி அருகே மொபட் மோதி முதியவர் பலி
x

ஆரணி அருகே மொபட் மோதி முதியவர் பலியானார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே மொபட் மோதி முதியவர் பலியானார்.

ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 70). கூலி வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் பகலில் ராட்டிணமங்கலம் கிராமபகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மொபட், ராமகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து ராமகிருஷ்ணனின் மகன் ஆனந்தன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ராமகிருஷ்ணனுக்கு சின்னத்தாய் என்ற மனைவியும், 2 மகன், 3 மகள்கள் உள்ளனர்.



Next Story