கட்டளை வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி
கட்டளை வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலியானார்.
திருவெறும்பூர்,செப்.19-
திருவெறும்பூரை அடுத்த பழங்கனாங்குடி ஊராட்சி பூலாங்குடி கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). இவர் கடந்த 16-ந்தேதி அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் அவர் மது அருந்திவிட்டு கட்டளை வாய்க்கால் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்தார். இதை யாரும் கவனிக்காததால் அவர் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதனிடையே மாரிமுத்துவின் மகன் செந்தில்குமார் தந்தையை காணாது பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து செந்தில்குமார் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் மாரிமுத்து வாய்க்காலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.