கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 15 April 2023 12:30 AM IST (Updated: 15 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியானார்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த முத்துகாமாட்சி (வயது 81). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். நேற்று இவர், அய்யம்பாளையம் மருதாநதி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது தோட்டத்து கிணறு அருகே சென்றபோது, முத்துகாமாட்சி கால்தவறி அதனுள் விழுந்துவிட்டார். சுமார் 100 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் பாதியளவு தண்ணீர் இருந்தது. இதனால் கிணற்று தண்ணீரில் அவர் தத்தளித்தார். இதற்கிடையே முத்துகாமாட்சி கிணற்றில் விழுந்ததை பார்த்த அவரது மகன் உதயகுமார், இதுகுறித்து உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், கிணற்றில் விழுந்த முத்துகாமாட்சி மீட்க முயன்றனர். அப்போது அவர் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story