விபத்தில் முதியவர் பலி
காரியாபட்டி அருகே விபத்தில் முதியவர் பலியானார்.
விருதுநகர்
காரியாபட்டி,
காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 70). இவர் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். அழகர்சாமி கடைக்கு சாமான் வாங்குவதற்காக காரியாபட்டி மெயின் ரோடு பாண்டியன் நகர் அருகே சாலையை கடந்தார். அப்போது சதீஷ்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து அழகர்சாமி மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அழகர்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடனே காரியாபட்டி போலீசார் இறந்த அழகர்சாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story