விபத்தில் முதியவர் பலி
விபத்தில் முதியவர் பலி
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி(வயது 80). இவர் சாப்பிடுவதற்காக புளியங்குடி காக்கூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பாலுசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து சென்று பாலுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story